Home செய்திகள் முன்கூட்டியே கண்டறிவதால் புற்றுநோய் இறப்பு விகிதத்தை பாதியாக்கலாம் .

முன்கூட்டியே கண்டறிவதால் புற்றுநோய் இறப்பு விகிதத்தை பாதியாக்கலாம் .

by mohan

முன்கூட்டியே கண்டறிவதால் புற்றுநோய் இறப்பு விகிதத்தை பாதியாக்கலாம் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் கருத்து உலக புற்றுநோய் தினமான இன்று செய்தியாளர்களை சந்தித்த மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வல்லுனர்கள் கூறிய தாவது: தடுக்கக்கூடியதாகவும் குணப்படுத்தக்கூடியதாகவும் உள்ள போதிலும் , இந்தியாவில் மரணங்களுக்கான முதன்மை காரணமாக , இதயநோய்களுக்கு அடுத்து புற்றுநோய்கள் திகழ்கின்றன நாட்டிலேயே ஐந்தாவது அதிகபட்ச மார்பக புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கையை தமிழகம் கொண்டுள்ளது பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே தென்னிந்திய மாநிலம் தமிழ்நாடாகும் இந்தியாவிலும் , தமிழகம் போன்ற மாநிலங்களிலும் , புற்றுநோயை இறுதிகட்டத்தில் , முற்றிய நிலையை எட்டிய பிறகே கண்டறியப்படும் போக்கு அதிகம் காணப்படுகிறது அவ்வாறு தாமதமாகக் கண்டறியப்படும் நோயாளிகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை . இதற்கு முற்றிலும் எதிராக அனைத்து வகையான புற்றுநோய்களுக்கான சிகிச்சைகளின் வெற்றி விகிதம் அதிகரித்து வருகிறது சிலவற்றுக்கு 99 % வரை என்று மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் பரிசோதனைகளை பிரபலப்படுத்துவதன் மூலமும் , விரிவான ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவ உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலமும் நாட்டின் புற்று நோய் இறப்புகளை இப்போதிருக்கும் நிலையில் பாதியாக குறைக்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி அனுசரிக்கப்படும் தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோய் நேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் 4 % அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டினர் . நமது நாட்டிலேயே ஐந்தாவது அதிகபட்ச மார்பக புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கையை தமிழகம் கொண்டுள்ளதையும் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே தென்னிந்திய மாநிலம் தமிழ்நாடு என்பதையும் அவர்கள் தெரிவித்தனர் . தனது உரையில் , மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் புற்றுநோயியல் பிரிவின் துறைத்தலைவர் , மருத்துவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது , உலகளவில் ஏற்படும் இறப்புகளில் , இல் புற்றுநோயால் ஏற்படுகிறது . இந்த உலகளாவிய போக்கைப் பிரதிபலிக்கும் வகையில் , இந்தியா புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கையில் உலகளாவிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது . மரணங்களுக்கான முதன்மை காரணமாக , இதய நோய்களுக்கு அடுத்து புற்றுநோய்கள் திகழ்கின்றன . சில ஆண்டுகளாக , ஆண்டுதோறும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு வகையான புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் மேலும் சுமார் லட்சம் இறப்புகள் ஏற்படுகின்றன . புற்றுநோய் பாதிப்புகளின் அடிப்படையில் தமிழகம் முதல் 10 மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது . இத்தகைய அதிக இறப்பு விகிதத்திற்கான ஒரு முக்கிய காரணம் தாமதமாக நோய் கண்டறியப்படுவது இத்தகைய தாமதக் கண்டறிதல்களுக்கான முக்கியக் காரணங்கள் விழிப்புணர்வு இல்லாமை , மற்றும் பரிசோதனைகளை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமை அல்லது அவற்றை செய்வதில் உள்ள தயக்கம் ஆகியவைகளே ஆகும் . -தேசிய புற்றுநோய் பதிவுத்திட்ட அறிக்கை 2020 ன் படி , 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 15.6 லட்சமாக அதிகரிக்கும் ” என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணரும் மருத்துவ புற்றுநோயியல் தலைவருமான மருத்துவர் கிருஷ்ணகுமார் அவர்கள் தெரிவித்தார் மேலும் அவர் புற்றுநோயில் 200 க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் இந்தியாவில் பெரும்பாலும் புற்றுநோய் பெரும்பாலும் மார்பகம் , நுரையீரல் , வயிறு மற்றும் பெருங்குடல் அல்லது மலக்குடல் ஆகிய பகுதிகளில் அதிகமாக உள்ளது இந்தியாவில் ஏற்படும் புற்றுநோய்களில் , ஆண்கள் மத்தியில் , புகையிலைப் பயன்பாடு காரணமாக தலை மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களும் , பெண்கள் மத்தியில் , கர்ப்பப்பைவாய் புற்றுநோயும் அதிகம் காணப்படுகின்றன என்றும் கூறினார் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் முதுநிலை மருத்துவ நிபுணர் மற்றும் தலைவர் மருத்துவர் R. விஜயபாஸ்கர் அவர்கள் , புற்றுநோய் ஒரு சிக்கலான நோயாக இருக்கும் போதிலும் , அதன் பெரும்பாலான ஆபத்து காரணிகள் மாற்றக்கூடியவைகளாகவே உள்ளன வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் குறைக்கக் கூடிய ஆபத்து காரணிகள் – அனைத்து வகையிலான புகையிலை பயன்பாடு , மது அருந்துதல் போன்றவையாகும் . மோசமான ஊட்டச்சத்து சில வைரஸ்களின் நீண்டகால தொற்று , அதிக எடை அல்லது உடல் பருமன் போன்றவை சமஅளவு ஆபத்தான பிற காரணிகளாகும் . முன்கூட்டியே கண்டறிதல் கண்காணித்தல் , வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்தல் மற்றும் அவர்களின் பகுதிகளில் சுகாதாரமான சூழலை உருவாக்குதல் போன்றவற்றின் வழியாக , இதில் பெரும் மாற்றத்தை உண்டாக்கலாம் என்று கூறினார் . அபாயக் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் பிரிவின் முதுநிலை மருத்துவ நிபுணர் P ஆனந்த செல்வகுமார் அவர்கள் , ” புற்றுநோயை 4 நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது . புற்றுநோய்க்கான சிகிச்சைகளில் , அறுவை சிகிச்சை கதிர்வீச்சுமீனாட்சி மிஷன் SO சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவைகள் அடங்கியுள்ளன உதாரணத்திற்கு , ஆரம்ப கட்டத்தில் தலை மற்றும் கழுத்து புற்றுநோயில் நோயாளிகளுக்கு ஒரு முறை சிகிச்சை மட்டுமே தேவைப்படும் அறுவை சிகிச்சை ( அல்லது ) கதிர்வீச்சு சிகிச்சை . இதுவே 4 வது நிலை ஆனவுடன் , பல முறை சிகிச்சைகள் தேவைப்படும் அதாவது , இரண்டு அல்லது மூன்று வகையான சிகிச்சைகள் புற்றுநோய்க்கான மாற்றக்கூடிய ஆபத்து காரணிகளான சீரான உணவுமுறை , சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவற்றை மேற்கொள்ளுதல் மற்றும் புகைபிடித்தல் , புகையிலை மெல்லுதல் , மது அருந்துதல் ஆகியவற்றைக் குறைத்தலுக்கான பொது சுகாதாரக் கொள்கைகளின் அவசியத்தை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தினர் . தவிர , புற்றுநோயின் சுமையை குறைக்க , சுகாதார காப்பீட்டின் பாதுகாப்பும் விரிவாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!