மதுரை அருகே இரண்டு இடங்களில் தீ விபத்து:

மதுரை திருமங்கலம் அருகே தோப்பூரில் ஊராட்சி துணைத் தலைவர் சந்திரா பால்பாண்டிக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தகவல் கிடைத்ததும், தீயணப்பு அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இதேபோல, மதுரை கப்பலூர் தியாகராசர் மில்லுக்கு பின்புறமுள்ள குப்பைக் கிடங்கிலும் தீ விபத்து ஏற்பட்டு, தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்