
மதுரையில் 32 வது சாலைபாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் பழகுநர் உரிமம் பெற வரும் நபர்களுக்கு சாலைபாதுகாப்பு பற்றிய வினாடி- வினா நடைபெற்றது. முதல் மூன்று இடம் பெறும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், செயலாக்கப்பிரிவு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபு, சரவணக்குமார், செந்தில்குமார், அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.மதுரை மாவட்டத்தில் 325 நபர்கள் பழகுநர் உரிமம் பெற வந்தவர்களிடம் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் சரியான பதில் அளித்த 90 நபர்களுக்கு எவர்சில்வர் வாட்டர் ஜக், பெரிய, சிறிய டிபன் பாக்ஸ் மற்றும் பேனாக்கள் பரிசாக வழங்கப்பட்டது. மாட்டுத்தாவணியில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலர் செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அனிதா, மனோகர் மற்றும் ஊமச்சிகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி கலந்து கொண்டு கேள்விகளை கேட்டு பரிசுகளை வழங்கினர். மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, தெற்கு வட்டார அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், திருமங்கலம் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் வாடிப்பட்டி அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணக்குமார் நிகழ்ச்சியை நடத்தி பரிசுகளை வழங்கினார்கள்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்மதுரையில் 32 வது சாலைபாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் பழகுநர் உரிமம் பெற வரும் நபர்களுக்கு சாலைபாதுகாப்பு பற்றிய வினாடி- வினா நடைபெற்றது. முதல் மூன்று இடம் பெறும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், செயலாக்கப்பிரிவு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபு, சரவணக்குமார், செந்தில்குமார், அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் 325 நபர்கள் பழகுநர் உரிமம் பெற வந்தவர்களிடம் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் சரியான பதில் அளித்த 90 நபர்களுக்கு எவர்சில்வர் வாட்டர் ஜக், பெரிய, சிறிய டிபன் பாக்ஸ் மற்றும் பேனாக்கள் பரிசாக வழங்கப்பட்டது. மாட்டுத்தாவணியில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலர் செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அனிதா, மனோகர் மற்றும் ஊமச்சிகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி கலந்து கொண்டு கேள்விகளை கேட்டு பரிசுகளை வழங்கினர். மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, தெற்கு வட்டார அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், திருமங்கலம் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் வாடிப்பட்டி அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணக்குமார் நிகழ்ச்சியை நடத்தி பரிசுகளை வழங்கினார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.