தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி எழுத்தாளர்கள் உட்பட அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.7850 வழங்க வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கை கைவிடவேண்டும், முடக்கப்பட்டுள்ள 21 மாத நிலுவை தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை அண்ணாநகர் பகுதியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஒய்வூதியர் சங்க மதுரை மாவட்ட தலைவர் குரு தமிழரசு தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கக் கூட்டமைப்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அனைத்து ஒய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஒய்வூதியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பேட்டி :குரு தமிழரசு, மாவட்ட தலைவர் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஒய்வூதியர் சங்கம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்