இராஜபாளையம்புதுகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் கிராம பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது தற்போது பெய்த மழையின் காரணமாக சேத்தூர் ,தேவதானம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வயல்காட்டில் தேங்கியதால் நெல்கள் அழுகி நாசமானது ஒரு சில பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்று வரும் சூழலில்தற்போது விவசாயிகள் நெல் அறுவடை செய்து வருகின்றனர் அறுவடை செய்யக் கூடிய நெல் களை அடிப்பதற்கு நெல் களம் இல்லாமலும் சாலை ஓரங்களில் நெல்களை போட்டு அடித்து மூட்டைகளாக பிரித்து வைக்கின்றனர் மேலும் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க இல்லாததால் விவசாயிகள் அவதி பட்டு வருகின்றனர்இராஜபாளையம் அருகே உள்ள புதுக்குளம் பாத்தியப்பட்ட 100 ஏக்கர் நெல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் நெல் கலை சாலை ஓரமாக மூட்டைக்கட்டி வைத்து தனியார் வியாபாரிகளிடம் 1100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்இது குறித்து விவசாயிகள் கூறும்போது அரசு கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்தால் ஒரு குவிண்டாலுக்கு 1300 ரூபாய் விலை கிடைக்கும் ஆனால் அரசு கொள்முதல் செய்யாததால் 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது ஆகையால் தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்