
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செல்லூர், சுயராஜ்ஜிய புரத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. பொறுப்புக் குழு உறுப்பினர் பொன். முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். பொறுப்புக் குழு உறுப்பினர்கள் குழந்தைவேலு, முகேஷ் சர்மா, வேலுச்சாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் பிவி.எஸ்.சேகர், வக்கீல் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தும் 5 ஆண்டுகளாகியும் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை. ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவதில்லை. முதியோர் சிலருக்கு இதுவரை உதவித்தொகை வழங்கவில்லை. ரேஷன் கார்டை ரத்து செய்து விட்டனர். இதனால் அரசு வழங்கிய பொங்கல் பரிசு ரூ.2500 எனக்கு கிடைக்கவில்லை என்றனர். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், பள்ளிகளை அரசு ஏற்று தரமான கல்வி வழங்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.