
டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து உள்துறை அமைச்சகத்தால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கூடுதல் பாதுகாப்பு பணிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.இதற்காக மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 5 அடுக்கு பாதுகாப்பு பணியிலும் தமிழக போலீசார் 2 அடுக்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் .மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் கண்காணிப்பு மற்றும் உடமைகளை தீவிர சோதனைகளுக்குபின்பேஅனுமதிக்கப்படுகின்றனர்.விமான நிலைய பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.