
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு 5 முதல் 8 சதவீதம் கூடுதல் வாக்குகளை பெறுவதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பங்கு வகிக்கும் என அதிமுகவின் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ராஜ் சத்யன் பேட்டி….மதுரை மாநகர காவல் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர காவல்துறைக்கு அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதுநவீன தெர்மல் ட்ரோன் கேமரா வழங்கப்பட்டது. இரவு நேரத்தில் கண்காணிக்கும் சிறப்பம்சம் கொண்ட இந்த ட்ரோன் கேமராவை மதுரை மாநகர காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ராஜ் சத்யன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ் சத்யன் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு 5 முதல் 8 சதவீதம் கூடுதல் வாக்குகளை பெறுவதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.