கால்வாயில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.

மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் சுமார் எட்டு அடி ஆழமுள்ள கிருதுமால் நதி சாக்கடை கால்வாயில் பசுமாடு ஒன்று விழுந்தது என மதுரை டவுன் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலையத்திற்கு தகவல் வந்தது இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான மீட்புக் குழுவினர் சாக்கடை கால்வாயில் விழுந்த பசு மாட்டை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் பத்திரமாக மீட்டனர் துரிதமாக செயல்பட்டு பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு மாட்டின் உரிமையாளரும் அப்பகுதி மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்