32வது தேசிய சாலைபாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.

மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி NCC மாணவிகள் இணைந்து நடத்திய சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது இதில். மதுரை மாநகர் அவனியாபுரம் பஸ் ஸ்டாண்டு முதல் பெரியார் சிலை ரவுண்டானா வரை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கார்த்திகா ராணி , அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் நவாஸ்தீன் உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவிகள் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர் மேலும் சாலை விதிகளை பின்பற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் அங்குள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்