மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இலவச பட்டா கேட்டு வந்த பொதுமக்கள்ஆதார் கார்டை தூக்கி எறிந்ததால் பரபரப்பு .

மதுரை வண்டியூர் நேதாஜி நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்அப்போது அவர்கள் இலவச பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்அப்போது 50க்கும் மேற்பட்டோர் ஆதார் கார்டை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டதுவண்டியூர் நேதாஜி நகரைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் கூறியதாவதுநேதாஜி நகரில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனஎங்களுக்கு அரசாங்கம் சகல வசதியும் செய்து கொடுத்து உள்ளது ஆனாலும் பட்டா வழங்கப்படவில்லை.இந்தநிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து எங்களின் குடியிருப்புகளை இடிக்கப் போவதாக மிரட்டுகின்றனர் பிறகு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆதார் கார்டை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு நேதாஜி நகரில் உடனடியாக பட்டா வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்