
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆட்டோவில் தொலைந்து போன 10 பவுன் தங்க நகையை உடனடியாக மீட்டு தந்த போலீசாருக்கு திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 42).இவர் திருமங்கலத்தில் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து திருமங்கலத்திற்கு வந்துள்ளார் அங்கிருந்து திருமண மண்டபத்திற்கு ஆட்டோவில் சென்ற முத்துக்குமார் தான் கொண்டு வந்திருந்த பேக்கை ஆட்டோவிலேயே மறந்து வைத்து விட்டார்.உடனடியாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு சென்ற முத்துக்குமார் ஆட்டோவில் பேக்கை மறந்து இறங்கி விட்டதாகவும் பேகில் 10 பவுன் தங்க நகை இருந்ததாகவும் புகார் அளித்தார்.இதையடுத்து காவலர்கள் ராஜா மற்றும் கார்த்திக் உடனடியாக ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்று விசாரித்ததில் பச்சை கோப்பன்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் ஆட்டோ என்று தெரியவந்தது.உடனடியாக ஜெயக்குமாரை தேடி கண்டுபிடித்த போலீசார் காணாமல் போன பேக் ஆட்டோவிலேயே இருந்ததைக் கண்டு பேக்கை மீட்டனர்.இதுகுறித்து தகவல் கிடைத்த டிஎஸ்பி வினோதினி காவலர்கள் ராஜா மற்றும் கார்த்திகை பாராட்டி நற்சான்று வழங்கினார். மேலும் ஆட்டோ டிரைவர் ஜெயக்குமாரையும் பாராட்டினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.