திருமங்கலத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு பிரச்சாரம் .

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.வட்டாட்சியர் முத்து பாண்டியன் தலைமையில் நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார நோட்டீஸ்களை பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் வட்டாட்சியர் முத்து பாண்டியன் வழங்கினார். அவருடன் வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்