
தேர்தல் வந்து விட்டதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டும் அல்ல , வேல் குத்த கூட செய்வார் , அம்மனுக்கு தீ கூட மிதிப்பார் , தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார்பசும் பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை வாங்கி கீழே கொட்டியவர் எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் , கபட வேடதாரி , அவர் ஒரு நாளும் முதல்வராக முடியாது .கூட்டணியில் உள்ள பிரேமலதா விஜயகாந்த் பேசுயது குறித்து கேட்டதற்கு,அவர்கள் சொந்த கருத்தை கூறுகிறார். கூட்டணியில் உள்ளவர்களை இப்படி பேசுங்கள் என கூற முடியாது.குங்குமம் கொடுத்தா அழிப்பது , விபூதி கொடுத்தால் தூக்கி எறிவது , இது போன்ற செயலை மக்களும் கடவுளும் ஏற்க மாட்டார்கள் , தை பூசத்திற்கு விடுமுறை அனைத்து மதத்தினருக்கு தேவையான நலத்திட்டங்கள் செய்வதில் கடவுள் அதிமுக பக்கம் தான் இருப்பார்2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெல்லும் ,மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார் என கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.