
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த பயணி மயங்கி விழுந்து பலியானார்.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் குளவயல் ஊரைச் சேர்ந்தவர் சேகர் 44. இவர் கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். மதுரைக்கு வந்தவர் சேகர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது .இதனால் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் .அவரது சாவு குறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.