
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட சிந்தாமணி பகுதியில், கடம்பவனம் அப்பளம் உரிமையாளர்கள் சங்கமானது மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்களால் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி தொடங்கப்பட்டது..! நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் மற்றும் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்..!!நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது :கொரோனா ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்ட அனைத்து துறைகளிலும், வணிகத்துறை மிகவும் பாதிக்கப்பட்ட ஒன்றாக இருந்ததாக கூறினார்..! மேலும், அப்பளம் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு மத்திய அரசு விதித்திருக்கும் GST வரியினை குறைக்க தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்..!மேலும், செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :அதிமுகவில் சசிகலாவினால் ஆதாயம் பெற்றவர்களே பலர் உள்ளனர் என பிரேமலதா விஜயகாந்த் பேசியது குறித்த கேள்விக்குஅவர்களுடைய பார்வையில் அந்த கருத்தை சொல்கிறார்களே தவிர, எங்களை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் தகுதியின் அடிப்படையில் பதவிகள் கிடைத்திருக்கிறது என தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் முதல்வருக்கும், துணைமுதல்வற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் உழைப்பு மற்றும் விசுவாசத்தின் அடிப்படையிலேயே அந்தந்த காலத்தில் பொறுப்புகள் கிடைத்துள்ளன என தெரிவித்தார்..! அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்கு யார் காரணம் என்று ஆராய்வதை விட, அந்த பொறுப்புகளுக்கு தகுதி படைத்தவர்களா என்று ஆராய்ந்து பார்ப்பது தான் சரியானதாக இருக்கும் என தெரிவித்தார்..!!சசிகாலவிற்கு கொரானா தொற்று ஏற்பட்டு விரைவில் குணமடையவுள்ளார் இது குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் பேசியது குறித்த கேள்விக்குசசிகலா குணமடைந்து வரவேண்டும் என அனைவரும் நினைப்பது போல், மனித நேயத்தோடு நானும் நினைப்பதாக கூறியது அவர், ஆனால் அரசியல் தலைமை தான் முடிவெடுக்கும் என கூறினார்…!!முதல்வர் கொரானா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளவில்லை என ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்குதடுப்பூசி போடுவதற்கான காலகட்டம் வரும்பொழுது நிச்சயம் முதல்வர் தடுப்பூசி போட்டுக்கொள்வார் எனவும் பிரதமரும் தடுப்பூசி போட விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்..!மேலும், பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதை கூறிய சட்டமன்ற உறுப்பினர், திமுக அனைத்து விஷயங்களில், ஒரு முன்னோடி என முந்திக்கொண்டு விமர்சனம் செய்கிறதே தவிர, திமுகவினர் முன்னோடி என நிரூபிப்பதற்கு யாராவது தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா என கேள்வி எழுப்பிய அவர், அவர்கள் தடுப்பூசி போட்டுகொண்டால் அதனை வரவேற்கவும் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்..!
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.