
போக்குவரத்து தொழிலாளிகளின் ஒய்வூதிய பணம் கிடைக்காது என பலர் கூறினார்கள். ஒய்வூதியம் கிடைக்காது என போக்குவரத்து தொழிலாளிகளிடம் துண்டி விட்டனர். அதை எல்லாம் முறியடித்து தமிழகம் முழுவதும் 900 கோடி வழங்கியுள்ளார்.பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் நாள்தோறும் 2000 க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து அவருடைய மனநிலை தெரிந்து வைத்து பணியாற்றுபவர்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் அதிலும் குறிப்பாக ஓட்டுநர்கள் வாகனத்தை ஓட்டும்பொழுது எம்ஜிஆர் பாட்டு கேட்டு தன் வாகனத்தை இயக்குகின்றனர். அந்தளவுக்கு எம்ஜிஆர் மீது பற்று வைத்துள்ளனர். மேலும் கொடுக்கப்பட்டுள்ள காசோலையை பணத்தை பத்திரமாக வைத்திருங்கள். சீட்டு மற்றும் தனியார் நிறுவனங்களில் முதலீடுசெய்து விட்டு ஏமாந்து விடாமல் ,வீடு நிலம் நிறைய போன்றவற்றை வாங்கிக் கொண்டு சந்தோஷமா இருக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.