மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டகொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரிஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறிமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.