Home செய்திகள் அதிமுக விருதுநகர் மேற்கு சார்பில் எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக விருதுநகர் மேற்கு சார்பில் எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

by mohan

முன்னதாக திருசெந்தூர் முருகன் அருள் என கூறி வெற்றில் வேல் வீரவேல் என முழக்கமிட்டு வேல் வழங்கினார்கள் .வேலும் வாலும் மேடையில் அமைச்சருக்கு வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அமைச்சர் முன்னிலையில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதேபோல் இராஜபாளையம் அருகே உள்ள N. புதூர் பகுதியைச் சேர்ந்த மாணவி பல் மருத்துவ படிப்பிற்காகமாணவி ராமதிலகம் நிதி உதவி கேட்டு அமைச்சரிடம் மனு கொடுத்தார். உடனடியாக மேடையில் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கினார்.புரட்சி தலைவர் கொண்டுவந்த இரட்டை இலைச் சின்னத்தை முடக்கப்பட்ட பொழுது மீண்டும் கொண்டு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதே போல் தற்போதும் இரட்டை இலை முடக்கப்பட்ட போது அதை கொண்டு வந்தவர்கள் முதலமைச்சர் எடப்பாடியும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தான்.திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் இரண்டு மாதம் மூன்று மாதங்கள் இந்த ஆட்சி என கூறி வருகிறார். இது உங்களுக்குத்தான் இரண்டு மாதங்களில் முடிவு கிடைக்கும்.அதிமுக தொண்டர்கள் ஒரு லட்சம் பேர் இன்று பச்சை மையில் கையெழுத்திட்டு வருகிறார்கள். அதற்கு காரணம் தமிழக முதல்வர் எடப்பாடி தான்.சட்டமன்றத்தில் சபாநாயகரே தள்ளிவிட்டு ஆடி ஆட்டம் போட்டவர்கள் இன்று மறைந்து விட்டார்கள்.மீதி உள்ளவர்களுக்கு என்ன கதி கிடைக்க போகிறதோ தெரியவில்லை, திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்டத்திற்கு ஆண்டவன் தக்க தண்டனை கொடுப்பான். ஆண்டவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.திமுக ஆட்சியில் மின்வெட்டு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது மின் வெட்டு இல்லாமல் மின் மிகை மாநிலமாக கொண்டு வந்துள்ளார் முதல்வர் எடப்பாடி .திமுக கட்சியினர் தமிழை விற்று பிழைப்பு நடத்துகின்றனர். தமிழை வாழவைத்த கட்சி அதிமுக.திமுக கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து தான் முள்ளிவாய்க்காலில் 2 லட்சம் தமிழர்களை படுகொலை செய்தது.தமிழர்களை 2 லட்சம் வரை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்த கட்சி காங்கிரஸ். அதற்குத் துணைபோன கட்சி திமுக. ஜல்லிக்கட்டை தடை போட்டது காங்கிரஸ், துணை போனது திமுக. இவர்கள் இன்று வந்து அலாங்க நல்லூரில் தமிழை பற்றி பேசினார்.2 லட்சம் வரை சுட்டு கொன்ற ராஜபட்சேவை பார்த்தால் சண்டை போட தோன்றுகிறது. துப்பாக்கியை எடுத்துக் சுட்டு கொல்ல வேண்டும் என சண்டை போடனும் என மனதில் தோன்றுகிறது.நீட் தேர்வை தடுப்பதற்காக மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டியது திமுகவும் காங்கிரசும், ஆகையால்தான் தமிழக முதல்வர் 7.5% நீட் தேர்வுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கி உள்ளார்.இந்தியா முழுவதும் எந்த டிவியை திருப்பினாலும் திமுகவை சேர்ந்த தாயாநிதி மாறன் தான் தொலைக்காட்சி நடத்தி வருகின்றனர்.திமுகவில் இளைஞர்கள் கிடையாது. ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதுபோல் ஆண்மீக கட்சி என்றால் அது அதிமுக கட்சிதான்திமுகவினர் யாரையும் நம்புவதில்லை, எவனையும் நம்பாத கட்சிதான் திமுக கட்சி.திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டு மாதத்துக்குள் நாங்கள்தான் ஆட்சி அமைபோம்என்றும் முதல்வர் நான் தான் என பைத்தியம் பிடித்து இருக்கிறார். அவர் நினைத்தால் ஆட்சிக்கு வரமுடியாது. மக்கள் தீர்மானித்து ஓட்டு போட வேண்டும் மக்கள் அனைவரும் அதிமுகவின் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போட வேண்டும் என தீர்மானித்து விட்டார்கள். அதிமுகவிற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூட இரட்டை இலை சின்னத்தை காண்பித்து தான் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு வருகிறார்.பொங்கல் பரிசு 2500 ரூபாய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 2500 ரூபாயை அனைத்து மக்களும் சந்தோஷத்துடன் வாங்கிக்கொண்டனர். ஏன் ஸ்டாலின் கூட வாங்கிக் கொண்டார். ஸ்டாலினால் இல்லை என கூற முடியுமா.இராஜபாளையம் பகுதியில் அனைத்து திட்டங்களையும் நாங்கள் கொண்டுவந்தோம். அத்தனை திட்டங்களும் இங்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர் நான் தான் கொண்டு வந்தேன் என போட்டோவுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.திமுகவினர் ஊர் ஊராகச் சென்று கிராமசபை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்கள் என்ன பஞ்சாயத்து தலைவரா ?இவர்கள் கிராம சபை கூட்டம் நடத்துகிறோம் என கூறி இரண்டு தரப்புக் கும் சண்டை ஏற்படுத்தி விடுகிறார்.இளைய தலைமுறை நடிகர்கள் அனைவரும் எம்ஜிஆர் ஆட்சி நான் தருவேன் என கூறுகின்றனர். உதாரணத்திற்கு கமலஹாசன் ரஜினியின் கூறுகிறார் .யாரவது கலைஞர் கருணாநிதி ஆட்சி தருவேன் என கூறுகிறார்களா?விரைவில் இராஜபாளையம் மற்றும் திருச்சுழி பகுதியில் அரசு கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.பேறு காலம் ஆகும் பெண்களுக்குத்தான் பத்து நாள் இருக்கிறது. நான்கு நாட்கள் இருக்கிறது 5 நாட்கள் இருக்கிறது என கூறுவார்கள். ஸ்டாலின் ஜோசியக்காரன் போல் 60 நாள் 35 நாள் 30 நாள் எனக் கூறி வருகிறார் .இந்த ஆட்சிக்கு என கூறி வருவதற்கு அவரால் பேச மட்டும்தான் முடியும் .எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் விரைவில் பறிபோகப் போகிறது என்று அவருக்கு நன்றாக தெரியும் கட்சியினர் யாரும் தங்களை விட்டு போகக் கூடாது என்பதற்காக ஒரு கூட்டம் போட்டு ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் செயல்படுகிறார்.ஸ்டாலினுக்கு பொங்கச் சோறு தான் கிடைக்கும். திமுக கட்சிகளுக்கும் பொங்கல் தான். நான் பால் கொடுக்க மாட்டோன் நான் தான் பால்வளத்துறை அமைச்சர். நல்லவர்களுக்குதான் பால் கொடுப்பேன் உங்களுக்கு பொங்கல் மட்டும் தான்.கொரோனா தொற்றுக் காலத்தில் ஆன்லைனில் படித்து மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ். மாணவர்களில் உள்ளம் கவர்ந்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.தேர்தல் முடிந்தவுடன் அடுத்த தைப்பொங்கலுக்கு அனைவருக்கும் 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைப்பேன். அது உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.ஸ்டாலின் வீடு வேளச்சேரியில் உள்ளது, அதற்கு இரண்டு பாலம் அண்ணா அறிவாலயத்திற்கு 2பாலம் கோபாலபுரத்தில் இரண்டு பாலம் கனிமொழி வீடு செல்லும் இடத்திற்கு இரண்டு பாலம் என மொத்தம் எட்டு பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது. அதை இடித்து விட்டு நாங்கள் கட்டுவோம்.கலைஞர் கருணாநிதி இறந்ததற்கு மனிதாபிமான அடிப்படையில் ஸ்டாலின் அப்பாவிற்கு இடம் கொடுத்தோம். உயர்நீதிமன்றம் கூறியது நாங்கள் நினைத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடத்தை கொடுத்திருக்க மாட்டோம்.பெருந்தலைவர் காமராஜருக்குஒரு நீதி. திமுக தலைவர் கருணாநிதி குடும்ப ஆட்சி நடத்தியவர் அவருக்கு ஒரு நீதியா.கலைஞர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு அவர் வீட்டிலேயே இருந்தார். அவரின் இறப்பில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. அவர் இறப்பில் ஒரு மர்மம் இருக்கிறது போல் தெரிகிறது. அதை நாங்கள் ஆட்சிக்கு மீண்டும்வந்தவுடன் முதல்வரிடம் சொல்லி அந்த மர்மத்தை வெளிகொண்டு வருவோம்.கலைஞர் கருணாநிதி நினைத்திருந்தால் ஸ்டாலினை தலைவராக கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவர் செயல் தலைவராக வைத்திருந்தார்.ஆகயால் தான் ஸ்டாலின் கலைஞருக்கு அறுவை சிகிச்சை செய்து கலைஞரை வீட்டிலேயே படுக்க வைத்து விட்டார். தலைவராக வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டார் என குற்றம் சாட்டினார்.தமிழகமெங்கும் அலை வீசுகிறது. இரட்டை இலை அலை வீசுகிறது என அமைச்சர் பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!