தர்ணா போராட்டம்

மத்திய அரசே இந்திய விவசாயிகளை கார்ப்பரேட்களிடம் அடகு வைக்காதே! உரிமைக்காக போராடும் விவசாயிகளின் போராட்டத்தை நசுக்காதே! மூன்று புதிய வேளாண் திருத்த சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்! விவசாய தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துசோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் (எஸ் டி டி யூ) தொழிற்சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக தர்ணா போராட்டம் தெற்கு வெளிவீதி க்ரைம் ப்ராஞ்ச் பகுதியில் நடைபெற்றதுஎஸ்.டி.டி.யூ மதுரை மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார் மாவட்ட பொதுச்செயலாளர் யூசுப் வரவேற்புரை நிகழ்த்தினார் மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் சிக்கந்தர் செயலாளர் சாகுல் ஹமீது துணை செயலாளர் நிஸ்தார் மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்..மாநில பொதுச்செயலாளர் அஜித் ரஹ்மான் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்..மாவட்ட பொருளாளர் மூர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார்INTUC/AITUC/HMS/CITU/LPF/MIFஅனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்