
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய இறுதி வாக்காளர் பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் இன்று வெளியிட்டார்.மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் (தனி) 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 பேர் என குறைந்த பெண் வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக உள்ளது. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 564 பேர் பெண் வாக்காளர்களாக உள்ளனர். அதேபோன்று சோழவந்தான் (தனி) ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 91 பேர் என குறைந்த ஆண் வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக உள்ளது.மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 643 பேர் ஆண் வாக்காளர்களாக உள்ளனர்.இறுதி வாக்காளர் பட்டியலின்படி மதுரை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 21 ஆயிரத்து 153 பேர். அதே போன்று பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 64 ஆயிரத்து 316 பேர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 202 பேர் ஆவர்.ஆக மதுரை மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 85 ஆயிரத்து 671 பேர். மதுரை மாவட்டத்தில் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 254 பேர் உள்ளனர். குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழவந்தான் (தனி) 2 லட்சத்து 17 ஆயிரத்து 470 பேராக் உள்ளனர் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்வின்போது எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்களின் கருத்தை கேட்டு வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில்லை என்று குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.