Home செய்திகள் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை .

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை .

by mohan

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் வருகின்ற 14ம் தேதி தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இதனையொட்டி அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைக் காக டோக்கள் வழங்கப்பட்டது.மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம், பாலமேடு, ஜல்லிகட்டு அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இருப்பதால் காளைகளுக்கு அடையாள சான்றிதழ் வழங்கப்பட்டது.தமிழகத்தில் வருடம்தோறும் தை மாத முதல் நாளில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற ஜனவரி மாதம் 14ஆம் தேதி அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.எனவே காளைகளின் உடலை பரிசோதித்து அதனுடைய உயரம் மற்றும் வேறு எதுவும் காயங்கள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு பின்னர், அதற்கான அடையாள சான்றிதழை கால்நடை மருந்தக உதவி இயக்குனர் திரு.சரவணன் அவர்கள் காளை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.இதைத் தொடர்ந்து வருகிற 11-ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளை சென்ற வருடம் ஐந்து பேரும் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த வருடம் இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களுடைய புகைப்படம் மற்றும் ஆதார் நகலை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com