பாட்டாளி மக்கள் சார்பில் 20 சதவீத இட ஒதுங்கிடை வழங்க கோரி மனு அளித்து போராட்டம் .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் இணைந்து வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டி ரயில்வே பீடர் ரோட்டில் இருந்து ஊர்வலமாக 300க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் மேற்கு மாவட்ட தலைவர் ராம்ராஜ் முன்னிலையில் ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட துணை செயலாளர் காளிதாசன் நகர செயலாளர் எபனேசர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் கோவிந்தராஜ் வனபேச்சி சீத்தாராமன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்