மீனாட்சி நகர் 62 வது வார்டு பகுதியில் அடிப்படை வசதி செய்து தராத மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள்போராட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதி உள்ளது மதுரை மாநகராட்சி இரண்டாவது பகுதியான இப்பகுதியில் சாலை வசதிகள் மற்றும் சாக்கடை வசதிகள் இல்லாததால் மழை நீர் தேங்கி குடியிருப்பு வாசிகளுக்கு பெருத்த சிரமத்தை ஏற்படுத்தியது இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பல்வேறு முறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் நேற்று முதல் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதார பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்