மதுரையில் பயணிகளை ஏற்றுவதில் முன்விரோதம் ஆட்டோ டிரைவர்கள் மோதல் 5 பேர் கைது.

மதுரை ஜன 6பயணிகளை ஏற்றுவதில் முன்விரோதத்தில் ஆட்டோ டிரைவர்கள் மோதிக்கொண்டததில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.பறவை நந்தனார் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 24 இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். கூடல் நகர் பாலாஜி நகரை சேர்ந்த ஆனந்தகுமார் என்ற கும்கி குமார் என்பவருக்கும் இடையே பயணிகளை ஏற்றுவதில் முன்விரோதம் இருந்து வந்தது .இந்நிலையில் பாண்டியராஜனின் நண்பர் மணியுடன் ஆனந்தகுமாருக்கு ஏற்பட்ட தகராறு தொடர்பாக பாண்டியராஜன் சமாதானம் செய்தார். இதில் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் தனக்கன்குலத்தைச் சேர்ந்த பூபதி என்ற பூட்டு19மகபூப் பாளையம் அன்சாரி நகர் முதல் தெருவில் சேர்ந்தஹைதர் அலி 21 எஸ் எஸ் காலனி சுப்பிரமணியபிள்ளை தெருவைச் சேர்ந்த பிரசன்னா 31 பழங்காநத்தம் வடக்கு தெருவைச் சேர்ந்த கவிபாரதி 26 மற்றும் மார்ட்டின் ,பாலாஜி ஆகியோர் பாண்டியராஜ னைகையாலும் கத்தியாலும்தாக்கியுள்ளனர் .இதுதொடர்பாக பாண்டியராஜன் எஸ் எஸ் காலனி போலீசில் புகார்செய்தார்.போலீசார்வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமார் என்ற கும்கி குமார் 23 பூபதி என்றபூட்டு 19.,மகபூப்பாளையம் ஹைதர்அலி21, பிரசன்னா 31 கவிபாரதி 26 ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்