
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்க பொங்கல் திருநாள் கொண்டாடப் படவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2500 ரூபாய் மற்றும் கரும்பு சர்க்கரை, உள்ளிட்ட ஏழு வகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார்விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் கிராமம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 2500 விநியோகத்தை R.56 கூட்டுறவு பால் உற்ப்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைமுருகேசன் ஆகியோர் தலைமையில் துவக்கி வைத்தனர்நிகழ்ச்சியில் பூபதிராஜா வங்கி தலைவர் ராதாகிருஷ்ணராஜா, 1066 கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாஸ்கரராஜ்,R.56 கூட்டுறவு பால் உற்ப்பத்தியார் சங்க தலைவர் வனராஜ், சொக்கநாதன் புத்தூர் நவரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.