இராஜபாளையம்-ஒப்பந்ததாரரைகேள்வி கேட்ட வார்டு உறுப்பினருக்கு கொலை மிரட்டல். டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கலங்காபேரிபுதூர் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது.இப்பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் இந்த பள்ளி கூடம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளிக்கூடம் சேதமடைந்ததால் புதிதாக கட்டிடம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு 15 லட்சத்து 50 ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் போடப்பட்டு மல்லி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜோதி முருகன் என்பவர் கட்டிடப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.தற்போது கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது பில்லர்கள் போடப்பட்டு வேலை நடைபெற்று வரும் நிலையம் மண் கொட்டும் போது சிறிய கல் பட்ட போது பில்லர் சாய்ந்து விட்டதால் இதை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் வார்டு உறுப்பினராக இருக்கக் கூடியவர் ஜனார்த்தனன் வேலை பார்க்கும் வேலை ஆட்களிடம் கேள்வி கேட்டுள்ளார் இதற்கு ஒப்பந்ததாரர் தொலைபேசி மூலம் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் 2 டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுமேலும் கொலை மிரட்டல் விடுத்தது ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த தகவல் அரிந்து வந்த காவல்துறையினரிடம் வழக்குப்பதிவு செய்யுமாறு கோரிக்கை வைத்தனர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்வதாக உறுதியாளித்த பின் போராட்டம் கைவிடப்பது இருப்பினும் அப்பகுதி மக்கள் டிராக்டர்களை விடுவிக்க வில்லை.

செய்தியாளர் வி காளமேகம்