சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூரில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள திருமங்கலம் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை வேனில் புறப்பட்டுச் சென்றனர்.அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செல்லக்கூடாது என்று கூறினர்.இதையடுத்து போலீ சாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் நடந்த வாக்குவாதத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 50 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்