துரைச்சாமிபுரம் பகுதியில் மில் தொழிலாளியின் இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியில் நூற்ப்ப ஆலையில் பணியாற்றி வரக்கூடியவர் சந்திரசேகர் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்தவர் தன் வீட்டு முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார் நள்ளிரவில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர்இந்த சம்பவம் குறித்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்மேலும் இப்பகுதி பொதுமக்கள் கூறும்போது இந்த பகுதியில் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது நள்ளிரவில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு வருகின்றன இது வரை காவல்துறை இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை கூட கைது செய்யவில்லைமேலும் இரவு நேரங்களில் இப்பகுதியில் போலீஸ் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் இது வரை இந்தப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நள்ளிரவில் எரிக்கப்பட்டுள்ளதுமேலும் இது போன்று சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களுடைய கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்