விபத்தில் சேதமடைந்த அரசு பேருந்து அதிக அளவு தேக்கம்: மழைநீர் தேங்குவதால் டெங்கு அச்சத்தில் அகற்றச் சொல்லி மக்கள் கோரிக்கை

விபத்தில் சேதமடைந்த அரசுப்பேருந்து அதிகளவு ஒரே இடத்தில் தேங்கி இருப்பதால் மழைநீர் தேங்கி டெங்கு கொசுவை உற்பத்தி செய்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.மதுரை திருமங்கலம் தாலுகா உட்பட்ட பகுதியில் சென்னை டு கன்னியாகுமரி நெடுஞ்சாலை உள்ளது இதில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுவதால் அதிக அளவு அரசு பேருந்துகள் சேதம் அடைந்துள்ளது.இதனை திருமங்கலம் பகுதியில் அதிகமாக விபத்துக்களில் உள்ளன அரசுப் பேருந்துகள் வைக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர் மழையின் காரணமாக மழைநீர் தேங்கி டெங்கு கொசுவை உற்பத்தி செய்து வருகிறது.எனவே இந்த பேருந்தை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்