Home செய்திகள் மயானத்தில் தண்ணீர் வசதி, மின் வசதியின்றி 10 ஆண்டுகளுக்கு மேல் பொதுமக்கள் அவதி .அமைச்சர் செல்லுர் ராஜூவின் தொகுதியில் அவல நிலை.

மயானத்தில் தண்ணீர் வசதி, மின் வசதியின்றி 10 ஆண்டுகளுக்கு மேல் பொதுமக்கள் அவதி .அமைச்சர் செல்லுர் ராஜூவின் தொகுதியில் அவல நிலை.

by mohan

திருப்பரங்குன்றம் அருகே முத்துப்பட்டியில் மயானத்திற்கு பொதுமக்கள் போர்வெல் அமைக்க அதிமுகவினர் எதிர்ப்பு காவல்துறை நடவடிக்கை.மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 93 வது வார்டு பகுதியில் முத்துப்பட்டி உள்ளது அங்குள்ள மயானத்திற்கு முத்துப்பட்டி, கோவலன் நகர், டிவிஎஸ் நகர், இந்திரா நகர், பகுதியில் இருந்து பொதுமக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக மயானத்திற்கு மின் விளக்கு ,தண்ணீர் வசதியும் கிடையாது.இறந்தவர்களின் வீடுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து ஈமச் சடங்குகளை செய்து வந்தனர் .மேலும் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் பெற்று வந்தனர்.இதனை பெற இயலாதவர்கள் அருகிலுள்ள கிருதுமால் நதி கால்வாயில் இருந்து சாக்கடை நீரில் ஈமச் சடங்குகளை செய்து வந்தனர்.இந்நிலையில் நேற்று முத்துப்பட்டியை சேர்ந்த விஜயகுமாரின் தாயார் இறந்து விட்டார். அவரது ஈம சடங்கு முத்து பட்டி மயானத்தில் நடைபெற்றது.அப்போது மயானத்தில் தண்ணீரில்லாமல் வாடகைக்கு இடங்களில் தண்ணீர் கொண்டுவந்தனர் இதுகுறித்து இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த திமுக செயற்குழு உறுப்பினர் இளமகிழன் பொதுமக்களின் குறையைப் போக்குவதற்காக போர்வெல் அமைக்க ஏற்பாடு செய்தார்.பொதுமக்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவும் கூறினார்

இதனையடுத்து இன்று பகல் 1 2 மணி அளவில் போர்வெல் வண்டி வந்து ஆழ்துளை குழாய் அமைக்கும் போது அருகில் இருந்த அதிமுக பிரமுகர்கள் மதுரை மாநகராட்சி உதவியாளரிடம் புகார் செய்தனர்.அதனை எடுத்து மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் போர் போட கூடாது என கூறி போரிடுவதை நிறுத்தினர்.காவல்துறையும் அங்கு வந்து அனுமதி இல்லாமல் போர் போட கூடாது என கூறி தடுத்து நிறுத்தியது பத்து வருடங்களாக அமைச்சராக இருந்த அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு மின்வசதியயை. தண்ணீர் வசதியை செய்து தராததால் நாங்களே சொந்தமாக போடுகிறோம் என கூறியும் காவல்துறை தடுத்து நிறுத்தினர் .இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.மதுரை மாநகராட்சி அதிகாரிகள் பொது மக்களுக்கு அடிப்படை வசதி செய்தி தராமல் பொதுமக்கள் செய்யும் வேலையையும் தடுத்து நிறுத்தியது பொதுமக்களிடையே மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com