Home செய்திகள் அனுமதி இன்றி மணல் அள்ளுவதை தடுத்த விஏஓ மீது தாக்குதல்;சுரண்டை அருகே பரபரப்பு..

அனுமதி இன்றி மணல் அள்ளுவதை தடுத்த விஏஓ மீது தாக்குதல்;சுரண்டை அருகே பரபரப்பு..

by mohan

சுரண்டை அருகே அனுமதி இன்றி மணல் அள்ளுவதை தடுத்த விஏஓ மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் சுரண்டை அருகே உள்ள ஆனைகுளம் வடக்குவாச்சி அம்மன் கோவிலுக்கு கீழ்ப்புறத்தில் தென்வடலாக செல்லும் ஓடையில் மணல் அள்ளுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

புகாரைத் தொடர்ந்து ஆனைகுளம் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளைப்பாண்டி, கிராம உதவியாளர் ஜேம்ஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதில் குலையநேரி கிராமம் மஜரா அம்மையாபுரம், வடக்குத் தெருவில் வசித்துவரும் சங்கரபாண்டி மகன் முருகன் மற்றும் அவரது மனைவி சித்திரைக்கனி ஆகியோர் ஓடையில் மணல் அள்ளி அதே பகுதியை சார்ந்த தனுஸ்லாஸ் மகன் தாசன் என்பவருக்குச் சொந்தமான டிராக்டரில் மணலை அள்ளிப் போட்டு நிரப்பிக் கொண்டிருந்தனர்.இந்த நபர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளியது குறித்து விஏஓ விசாரணை மேற்கொண்டபோது டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையாளர் தாசன் எதிர்பாராத விதமாக ஆவேசத்துடன் திடீரென ஆனைகுளம் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளைப்பாண்டியை மணல் அள்ளும் சட்டியால் தாக்க முற்பட்டார்.கிராம நிர்வாக அலுவலர் தனது இடதுகையால் தடுத்து நிறுத்தி தன்னை தற்காத்துக்கொள்ள ஓடி தப்பித்தார்.ஓட்டுநர் தள்ளாடி தரையில் விழுந்தார்.இது தொடர்பாக வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அறிவுரைப்படி சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினரால் டிராக்டர் வாகனம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து எஸ்ஐ தினேஷ் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com