Home செய்திகள் திருமங்கலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வாலிபர் – உறவினர்களுக்கு தகவல் அளிக்காமல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதால் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

திருமங்கலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வாலிபர் – உறவினர்களுக்கு தகவல் அளிக்காமல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதால் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

by mohan

திருமங்கலத்தில் தண்ணீர் வாகனத்திலிருந்து டீக்கடைக்கு மின்மோட்டார் மூலம் அங்குள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்ப முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்த டீ கடை உரிமையாளர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்இதனால் உறவினர்கள் சாவில் மர்மம் உள்ளதாக கூறி திருமங்கலம் நகராட்சி முன்பு சாலை சாலை மறியல் செய்த உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்மதுரை மாவட்டம் திருமங்கலம் விமான நிலைய சாலையில் உள்ள பெரிய ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கம் என்பவரது மகன் செல்வம்(22) இவர் பட்டதாரி வாலிபர் மூன்றாம் ஆண்டு படித்து படித்து வந்தார்கொரோனா ஊரடங்கால் இவர் திருமங்கலம் அருகே உள்ள சுங்குராம்பட்டியில் செயல்பட்டு வரும் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் வேன் மூலம் தண்ணீர் கொண்டு சென்று கடைகள் மற்றும் வீடுகளுக்கு வினியோகம் செய்யும் பணியில் இருந்து வந்துள்ளார்இந்த நிலையில் அன்று(23/12/2020) காலை 6 மணிக்கு திருமங்கலம் விமான நிலைய சாலையில் உள்ள டீக்கடை ஒன்று தண்ணீர் நிரப்புவதற்காக வாகனத்தில் இருந்த மின் மோட்டாரை இயக்கும் போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி நிலையில் இருந்துள்ளார்.இதைத்தொடர்ந்து டீக்கடை ஊழியர்கள் மயங்கி கிடந்த செல்வத்தைப் தூக்கிவந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்இதனைத் தொடர்ந்து வாலிபரை தூக்கி வந்த டீ கடை ஊழியர்கள் நாங்கள் உறவினர்கள் அல்ல என தெரிவித்து விட்டு சென்றதால் மருத்துவர்கள் இறந்த வாலிபரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் அதன் பின்பு யார் என்ற விவரம் தெரிய வர இறந்த வாலிபரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்தகவல் அறிந்து வந்த உறவினர்கள் தங்களுக்கு தெரிவிக்காமல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததை கண்டித்து இறந்த வாலிபரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி திருமங்கலம் மதுரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனை அறிந்து வந்த திருமங்கலம் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சாலை மறியலை கைவிட வேண்டுமென கூறியதை அடுத்து போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுஎன தொடர்ந்து போலீசார்பேச்சுவார்த்தை நடத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படும் வாலிபர் உடலை பெற்றோருக்கு தெரிவிக்காமல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்த மருத்துவ நிர்வாகத்தை கண்டித்தும் வாலிபரின் சாவில் மர்மம் உள்ளதாகவும் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுஇதுதொடர்பாக உறவினர் ஒருவர் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது அதைப் பார்த்த திருமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வினோதினி பேட்டி கொடுத்தவரை முதுகில் தட்டி செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளரை பார்த்து யார் நீ படம் பிடிக்கிற நீ என்ன போலீசா உனக்கு அறிவு இருக்கா என கேட்டு செய்தி சேகரிப்பை நிறுத்தச் சொன்னார். மேலும் செல்வத்தின் உறவினர்கள் இறப்பிற்கான காரணம் குறித்தும் நிவாரணம் வழங்க வேண்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com