
ராமேஸ்வரம் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் கருப்பையா அக்.24ல், சத்திரக்குடி அருகே நான்கு சக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நவ. 19ல் உயிரிழந்தார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட காவல் துறை பணியாளர்கள் இணைந்து சார்பு ஆய்வாளர் கருப்பையா குடும்பத்திற்கு உதவ முன் வந்தனர். அனைவரும் விருப்பத்துடன் வழங்கிய நிதி ரூ.5.62 லட்சத்தை சார்பு ஆய்வாளர் கருப்பையா மனைவி, மகனிடம், காவல் கண்காணிப்பாளர்கார்த்திக் வழங்கினார்.
மனமுவந்து உதவிய அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல்
ஆளினர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
You must be logged in to post a comment.