
மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர் என்று ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெண் காவலர்களே இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினசரி காலை 09.00 மணிமுதல் 20.00 மணிவரை அலுவலில் இருப்பார்கள். இவர்கள் காவல் நிலையத்திற்கு வரக்கூடிய மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை கனிவோடு வரவேற்று வருகைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு காவல் நிலையத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் அழைத்து செல்வர்.வரவேற்பாளர்களுக்கு வேறுபணி வழங்கப்படாமல் வரவேற்பாளராக மட்டும் பணிபுரிவர். இந்த வரவேற்பாளர்களை காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் எளிதில் அடையாளம் காண்பதற்காக அவர்களுக்கு வில்லை (Badge) வழங்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு காவலர்கள் சட்டம் & ஒழுங்கு குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகிய அனைத்திற்கும் பொதுவான அலுவலராக செயல்படுவார்கள். பொதுமக்கள் அமர்வதற்காக போதுமான இருக்கை வசதிகள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செய்யப்பட்டுள்ளது. எழுத படிக்க தெரியாதவர்களுக்கு புகார் மனுவை எழுதிக்கொடுப்பார்கள்.
You must be logged in to post a comment.