Home செய்திகள் திருமங்கலம் அருகே ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டும் பணி

திருமங்கலம் அருகே ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டும் பணி

by mohan

ஜெ. பேரவையின் சார்பில் திருமங்கலம் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டும் பணியினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஜெ. பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டி வருகிறார். இந்த கோவில் அமைக்கும் பணியினை அமைச்சர் ஆர். பி.உதயகுமார் ஆய்வு செய்தார்.அவருடன் அவரது தந்தை ஆர்.போஸ் அவரது தாயார் பி.மீனாள் மற்றும் கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி உட்பட பலர் இருந்தனர்.இதுகுறித்து அமைச்சர் ஆர். பி .உதயகுமார் கூறியதாவது,உலகமெங்கும் வாழும் 10 கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.மக்கள் நலனே தன் நலன் என்று மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து ஒரு தியாக தீபமாக வாழ்ந்து ஒன்றரை கோடி தொண்டர்களின் குலதெய்வமாக அவர் திகழ்ந்து வருகிறார்.இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அவர் முழக்கமிட்டார் அந்த லட்சிய முழக்கங்களை இன்றைக்கு நமது முதல்வரும், துணை முதல்வரும் அவரின் பாத தடத்தில் அடிபிறழாமல் நிறைவேற்றுகின்றனர். இந்த இயக்கம் நிச்சயம் இன்னும் நூறு ஆண்டுகாலம் மக்கள் பணியாற்றும். ஏனென்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்கு தெய்வ வாக்கு. நிச்சயம் பலிக்கும்தொடர்ந்து இன்றைக்கு எங்களது குடும்பத்தாரும் குல தெய்வமாக அவரை வழிபட்டு வருகிறோம். அந்த தெய்வத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் நல்லாசியுடன் தற்போது ஜெ. பேரவை சார்பில் கோயில் கட்டி வருகிறோம் இந்த கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவ வெண்கலச் சிலையும் ,அதேபோல் எம்ஜிஆருக்கு முழு நீள வெண்கலச் சிலையும் அமைக்கப்பட உள்ளது.அதுமட்டுமில்லாது இந்த திருக்கோவிலில் அனைத்து மக்களும் வழிபடும் வண்ணம் அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த பணி விரைவில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என கூறினார்..

..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com