தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் லிங்கம் தலைமையில் 2 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் தேவதானம் பகுதியில் இயங்கும் துணைஆரம்ப சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் தேவதானம் பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து கோசங்கங்கள் முழக்கமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்