மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளான கள்ளபட்டி, சீமானுத்து, காளப்பன்பட்டி, நாவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் மக்காச்சோளப் பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்த நிலையில் மக்காச்சோளப்பயிர்கள் அனைத்தும் நல்ல விளைச்சலை கண்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் கடந்த 20நாட்களுக்கு மேலாக தொடர் சாரல் மழையால் பெய்து வருவதால் மக்காச்சோள பயிரிட்டுள்ள நிலத்தில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாலும், ஒரு சில நிலத்தில் மழைநீர் வெளியேறாமல் தேங்கியிருப்பதால் அறுடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள கதிர்களை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் மக்காச்சோள பயிர்களுக்கு 1ஏக்கருக்கு ரூ.15ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் ரூபாய் வரை செலவழித்த பணம் கூட கிடைக்காமல் போகும் நிலை உருவாகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.