ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் 234 தேங்காய் உடைத்து, இனிப்பு வழங்கி கொண்டாடிய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள்

ரஜினியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டும் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றம் வெற்றிபெற வேண்டி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பு ரசிகர்கள் தேங்காய் உடைத்தும், 1000 லட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கியும், 234 எலுமிச்சை பழங்கள் மற்றும் 234 வடைகளை மாலையாக கோர்த்து சாமிக்கு சாத்தியும் கோவிலில் வழிபட்டனர்.ரஜினியின் 70-வது பிறந்தநாள் கொண்டாடபடவுள்ளது, இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கும் விதமாகவும், அவரது 70-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட உள்ளனர். அதன் ஒரு பகுதியாக மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளர் அழகர்சாமி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் கோவில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றம் வெற்றிபெற வேண்டி 234 தொகுதிகளுக்கும் ஒரு தேங்காய் வீதம் மொத்தம் 234 தேங்காய்கள் திருப்பரங்குன்றம் கோவில் வாசல் முன்பு ரசிகர்கள் உடைத்தும், 1000 லட்டுகளை பொதுமக்களுக்கு வழங்கியும், 234 எலுமிச்சை பழங்கள் மற்றும் 234 வடைகளை மாலையாக கோர்த்து சாமிக்கு சாத்தியும் கோவிலில் வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்