கொல்லங்கொண்டான் விலக்கு பகுதியில் நெல் மூடைகள் ஏற்றி வந்த லாரி நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்து.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கொல்லங்கொண்டான் விலக்கு பகுதியில் தர்மபுரியில் இருந்து தளவாய்புரம் பகுதிக்கு ரைஸ் மில்லுக்கு நெல் மூடைகள் ஏற்றி வந்த லாரி நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதி சாலை ஒரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த சேத்தூர் ஊரக காவல்துறையினர் விபத்து குறித்து தர்மபுரி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் அருள் என்பவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்