Home செய்திகள் மதுரையில் தெப்பக் குளத்தில் தண்ணீர் நிரப்பி வருவதை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பார்வையிட்டார்

மதுரையில் தெப்பக் குளத்தில் தண்ணீர் நிரப்பி வருவதை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பார்வையிட்டார்

by mohan

மதுரையில் தெப்பக் குளத்தில் தண்ணீர் நிரப்பி வருவதை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பார்வையிட்டு பின்னர் செய்தியாளரிடம் கூறியதாவது, எதிர்க்கட்சித் தலைவர் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காக ஏதாவது ஒன்று சொல்லி கொண்டிருக்கிறார். மத்திய அரசின் எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றும் போது, அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றதால் நீதிமன்றம் வருங்கால சந்ததியினர் கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் நிலம் எடுக்கலாம், ஆர்ஜிதம் பண்ணலாமென தீர்ப்பு வழங்கியிருக்கிறது .கடந்த திமுக ஆட்சியின்போது 6 வழி சாலை போடப்பட்டது அப்போது பல மரங்கள் பிடுங்கப்பட்டது 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் பிடுங்கப்பட்டது அவற்றையெல்லாம் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா  போராட்டம் நடத்தவில்லை பொதுமக்களுக்கு தேவை என்பதை கருத்தில் கொண்டு போராட்டம் நடத்தாமல் இருந்தார் அவருக்கு தெரியாத போராட்டமா அவர் மக்களுக்காக இத்திட்டத்தை ஆதரித்தார்கள். திமுக தலைவருக்கு எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என ஜீபூம்பா மந்திரகாளி என்று சொல்வார்களே அதைப் போல எதையாவது சொல்லி மந்திரத்தைச் சொல்லி முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று எண்ணுகிறார் நடக்குமா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறார் எனவே மக்களால் திட்டங்கள் பாராட்டப்படுகிறது. ராஜா பற்றி செய்தியாளர் கேள்விக்கு குற்றவாளிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, சாதாரண சைக்கிளில் சென்ற வர் இன்று பாரின் காரில் செல்கிறார் இவருக்கு எப்படி வந்தது ஊழல் செய்து பணம் சம்பாதித்தார் இன்று உலகமெங்கும் தமிழர்களின் பெருமை கெட்டுவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்து தமிழர்களின் மானத்தை மரியாதை கொடுத்தவர் ராசா .எந்த மாநிலத்திற்கும் வேட்டி கட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என்றார் ரஜினி ரசிகர்கள் ரஜினி முதலமைச்சர் போல் காட்சியளிக்கும் போஸ்டர் ஓட்டி இருப்பது குறித்த கேள்விக்கு ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்கள். யோகிபாபுவுக்கு கூட முதலமைச்சர் பதவி கொடுப்பது போல் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள். அதுபோல ரஜினிக்கு ஒட்டி இருக்கலாம் அது அவர் ரசிகர்கள் விருப்பம். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி கமல் உள்ளிட்ட சில நடிகர்கள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் அதிமுகவுக்கு பின்னாடி ஏற்படுமா என்று கேட்ட கேள்விக்கு மக்களுக்கான திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுத்து வருகிறோம் கொரோனா காலத்தில் நாங்கள் பல்வேறு பணியாற்றுகிறோம் ஒவ்வொரு நாளும் மக்கள் நலத்திட்டங்களை பார்வையிட்டு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு மக்களுக்கான திட்டங்களை கொடுத்து வருகிறோம் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்துவிடும் மக்கள் மக்களாக நாங்கள் இருக்கிறோம் மக்கள் எங்கள் பக்கம் இருப்பார்கள் எங்கள் தலைவர் கூறியதைப்போல மக்கள்தான் எஜமானர்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதைப் போல மக்கள் நினைத்தால் தான் ஆட்சி செய்யமுடியும் அந்த வழியிலேயே முதல்வரும் செயல்பட்டு வருகிறார் தற்போதைய காலத்தில் கூட கடலூருக்கு இரண்டாம் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து குறைகளை தீர்த்து வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேட்டி கொடுப்பதற்கு மட்டுமே செயல்படுகிறார் நாங்கள் மக்களோடு மக்களாக இருக்கிறோம் மக்கள் பிரதிநிதியாக பணியாற்றுகிறோம் மக்களுக்காக பணியாற்ற நாங்கள் மக்களோடு மக்களாக இருக்கிறோம் எங்களை எதிர்ப்பதற்கு யாரும் கிடையாது மக்கள் எங்களை தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றார் மத்திய குழு பார்வையிட்டபோது விவசாயிகள் அவரிடம் பேசி குறைகளை சொல்ல அனுமதிக்கப்படாத குறித்து கேட்டதற்கு மத்திய குழு தமிழகத்தில் உள்ள நிலையை ஆராய்வதற்காக வருகிறார்கள் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை குறித்தே கண்காணிப்பதற்காக வருகிறார்கள் அவர்களுக்கு மொழி பிரச்சனை இருக்கலாம் அவர்கள் பணிவு அனைத்து பணிகளுக்கும் செல்லவேண்டியிருக்கும் விமர்சனத்திற்கு ஆக இந்த குற்றச்சாட்டை சொல்லப்படுகிறது குறிப்பிட்ட காலகட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும் என்பதுதான். எனவே தேவை என்பதை அறிந்து எவ்வளவு நிதி கொடுக்கலாம் என்பதை ஆய்வு செய்தனர், என்றார்…

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!