மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் முட்புதரை ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவர் மதுரை மாட்டுத்தாவணி பகுதி உள்ள பிரபல ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார் இந்தநிலையில் இவர் இன்று மாட்டுத்தாவணி அருகே இருக்கக்கூடிய முட்புதரில் இறந்த நிலையில் நிர்வாணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது, அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மேலும் இறந்தவர் நிர்வாண நிலையில் இருந்ததால் எதற்காக கொலை நடந்துள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்