
மதுரை கிரீன்விச் அபார்ட்மெண்ட் மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ளது இங்கு மருந்து விற்பனையாளர் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார் விக்னேஷ் கார்த்திகை தீப திருநாள் காக்க தன்மகன் கேட்டதற்காக மத்தாப்பு மற்றும் சிறியரக வெடி பொருட்கள் வாங்கி வீட்டில் வைத்துள்ளார் இதன் அருகே சனிடைசர் அதிக அளவு வீட்டில் வைத்துள்ளார் இவரது மகன் திடீரென அதிலிருந்த மத்தாப்பு ஒன்றை பற்ற வைத்துள்ளார் விதமாக விளையாட்டாக வீட்டில் வெடிபொருளை பற்ற வைத்துள்ளார் அந்த வெடிபொருளில் ஏற்பட்ட தீப்பொறி பரவி அருகிலுள்ள சானிடைசரில் பட்டு தீப்பற்றி எரிந்ததில் வீட்டில் ஒரு பகுதி எரிந்து சாம்பலானது இதனை அறிந்த வீட்டின் உரிமையாளர் விக்னேஷ் வீட்டில் உள்ள அனைவரையும் வெளியேற்றியதால் மிகப்பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் எனினும் வீட்டிலுள்ள பீரோ கட்டில் உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்து கருகியது சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு இருக்கும் அப்பார்ட்மெண்டில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…. தீபாவளிக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளினால் விபரீதம் நடக்காமல் இருக்க, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பலதரப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் அலட்சியமாக பட்டாசு வெடித்து தீ விபத்தில் சிக்குவது பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது இவ்விபத்து குறித்து எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.