Home செய்திகள் தொடர் மழையால் நீண்ட நாட்களுக்கு பின் நிரம்பிய பரவை கண்மாய் – கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு

தொடர் மழையால் நீண்ட நாட்களுக்கு பின் நிரம்பிய பரவை கண்மாய் – கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு

by mohan

தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அனைத்து குளங்கள் கண்மாய்கள் ஏரிகள் நிரம்பி வருகிறது. மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பரவை பேரூராட்சியில் அமைந்துள்ள 175.70 மில்லி கன அடி கொள்ளளவு கொண்ட கண்மாய் நீண்ட நாட்களாக தண்ணீர்வரத்தின்றி காணபட்டது.தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரி கண்மாய் தூர்வாரி பராமரிக்கப்பட்டதன் விளைவாக தற்போது பெய்துவரும் தொடர் மழையால் கண்மாய்க்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சென்று ஆய்வு செய்தார்.இதில் பரவை பேரூராட்சி முன்னாள் சேர்மன் ராஜா, மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், அதிமுக மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம் பொதுபணித்துறை செயற்பொறியாளர் சுகுமாரன், உதவி பொறியாளர் மாயகிருஷ்ணன் உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com