மதுரை விமான நிலையத்தில் 56 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது

துபாயிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகள் இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்க இலாக்க நுண்ணறிவு பிரிவினர் அவரை தனியாக அழைத்து சோதனை செய்த போது அவரிடமிருந்து 1091.560 கிராம் எடையும் ரூ.56 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள தங்க கட்டிகளை களிமண்ணில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய சுங்க இலகா நுண்ணறிவு பிரிவினர் வெளி நாட்டில் இருந்து வரும் விமான பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். துபாயிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்ட போது சந்தேகப்படும்படியான இருவரின் உடமைகளை சோதனை செய்தனர் அப்போது அவர் கொண்டுவந்த கட்டியான களிமண்ணில் மறைத்து தங்க கடத்தி வந்தது தெரியவந்தது.கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.56,58,647 ஆகும். இதனையடுத்து அவரிடமிருந்து தங்க கட்டிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர். மேலும் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தங்கம் கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்