
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் செம்பூரணி சாலையில் உள்ள தனது மகனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் 6 ” அடி தத்துரூப மெழுகு சிலை ஒன்றை நிறுவி மரியாதை செலுத்திய தந்தை.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் -சரஸ்வதி தம்பதியினருக்கு சுதா மற்றும் கீதா ஆகிய 2 மகள்களும், மாரிகணேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் கடைக் குட்டியாக பிறந்த மாரிகணேஷ்க்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சிறுவயது முதலே வீட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் அதீத அன்பு செலுத்தியுள்ளனர். குறிப்பாக மாரிகணேஷ் சிறு புல்லட் பைக் ரேசராக இருந்ததோடு கோவா, மும்பை டெல்லி போன்ற இடங்களில் நடந்த பைக் ரேஸ் பந்தயங்களில் கலந்து பதக்கங்கள், விருதுகளும் பெற்றதோடு பல்வேறு போட்டிகளில் முதலிடத்தை ப மாரிகணேஷ பிடித்துள்ளார். உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு நவ., 18 ஆம் தேதியில் உயிரிழந்தார்.
இந்நிலையில் மாரிகணேஷின் முதலாமாண்டு நினைவு தினத்தில் அவரது தந்தை முருகேசன் சுமார் 6 லட்சம் செலவில் மாரிகணேஷின் தத்ரூபமாக மெழுகு சிலை செய்து அவனியாபுரத்தில் உள்ள செம்பூரணி சாலையில் உள்ள தனது திருமண மண்டபத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழிபாட்டுக்கு வைத்தார்.தொடர்ந்து மாரிகணேஷின் உருவசிலையை காணவும், முதலாமாண்டு நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் மெழுகு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முருகேசன், தந்தை பேசும்போது;ஆழ்ந்த சோகத்தில் விட்டு சென்ற மகனின் நினைவாக வைத்துள்ள சிலையை குடும்பத்தார்கள் அனைவரும் பாதுகாத்து வருவார்கள் என்றும், எங்களில் ஓர் அங்காமாக திகழும் மாரி கணேஷ் நினைவு தினமான நவம்பர் 18 தினத்தை குருபூஜை யாக நடத்த முடிவு செய்துள்ளோம் . கோவா , மும்பை டெல்லி போன்ற இடங்களில் நடந்த பைக் ரேஸ் பந்தயங்களில் பல பதக்கங்கள் வென்றுள்ளார் என்று முருகேசன் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.