Home செய்திகள் வாகனம் அதிக செல்லும் பகுதியில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அதிர்ச்சி..

வாகனம் அதிக செல்லும் பகுதியில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அதிர்ச்சி..

by mohan

கன்னியாகுமரி மதுரை தேசிய நெடுஞ்சாலை பைக்காரா பகுதியில் நேற்று 12/11/2020 அன்று மாலை 4 மணி அளவில் திடீரென 10 ஆழத்தில் ஆழத்திற்கும் இரண்டு அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டது இதை பார்த்த பொதுமக்கள் வாகனங்களை ஓரமாக நிறுத்தி காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாலு தாய் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக பள்ளத்தின் அருகே தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்து மாற்றம் செய்தனர் மேலும் இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் மதுரை மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு திடீரென ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டதற்கு இந்த இடத்தில் ஏற்கனவே நல்ல தண்ணி வாய்ப்புகள் இருந்திருக்கலாம் அது அகற்றப்பட்டு மாற்று இடத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம் எனவும் இது வாகனம் அதிகம் செல்லும் பகுதி என்பதால் அதிர்வு தாங்காமல் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் விழுந்து இருக்கலாம் என தெரிவித்தனர் எனினும் உடனடியாக பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட உள்ளோம் பணிகள் விரைவில் நிறைவடைந்து விடும் எனவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!