வங்கி மற்றும் காப்பீடு நிறுவனத்தின் மீது, அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தினர் புகார்

மதுரையில் உள்ள தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் தனியார் காப்பீடு நிறுவனத்தின் மீதும் அப்பள ராமன் அப்பள டிப்போ நிர்வாகத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த பின்பு நிருபர்களிடம், அப்பள நிறுவனத்தின் இயக்குநர் கூறியது:மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டி அருகே வன்னிவேலம்பட்டி ரோடு, முத்தமிழ் நகரில் அப்பள ராமன் அப்பள டிப்போ நடத்தி வருகிறோம்.இயற்கை பேரிடர் காரணமாக தொழிற்சாலையில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்திக்க வங்கி கடனை மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் வரவு செலவு செய்வதால், அங்கு கடணை பெற்றோம். கடணை பெறும்போது, வங்கியினரால் துவக்கப்பட்ட கடன் காப்பீட்டு திட்டத்தின் படி, காப்பீடு கோரிய போது வங்கி நிர்வாகத்தினர் காப்பீடு பாலிசியை எங்களிடம் கொடுத்தனர்.அந்த பாலிசியில் பல குளறுபடிகள் இருந்ததாம்.அதனை நாங்கள் சுட்டி காட்டியபோது, வங்கியினரும், காப்பீடு நிறுவனமான ரிலையன்ஸ்ம் குளறுபடிகளுக்கு பொறுப்பு ஏற்க மறுத்தனராம்.மேலும், இழப்பீடு தர மறுத்தத்துடன், காலம் தாழ்த்தி வந்தனராம்.காப்பீடு நிறுவனமானது, பாலிசியில், நிறுவனத்தின் ஜிஎஸ்டி எண்ணை போடவில்லை. தொலைபேசி எண்ணை தவறுதலாக போட்டது, முகவரியில் குளறுபடி மேலும், ஆய்வு செய்யாமலே காப்பீடு போட்டது என பல தவறுகள் இருந்ததாம். வங்கியானது, வாடிக்கையாளரின் பணத்தினை தனிப்பட்ட உபோயோகத்துக்கு பயன்படுத்தியது, உரிய ஒப்புதல் இன்றி எஸ்.பி. ஸ்பெஷல் கணக்கு தொடங்கப்பட்டு பணபரிவர்த்தனை செய்தது.வக்கீல் அறிவிப்பு கிடைத்த பிறகும், வங்கி உத்திராவாதத்தினை ரத்து செய்து தொகையினை பரிவர்த்தனை செய்தது.ஆகவே, வங்கி நிர்வாகம் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய வேண்டும் எனக் கோரினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்