அலங்காநல்லூரில் சத்துணவு பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சத்துணவு பணியாளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.இம் முகாமுக்கு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பிரேமராஜன் தலைமை வகித்தார். விரிவாக்க அலுவலர் சத்துணவு ராஜமார்த்தாண்டன், வருகிற 16-ம் தேதி சத்துணவு கூடங்களில், இந்திய விதிமுறைப்படி உணவு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில், அலங்காநல்லூர் ஒன்றிய சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் செய்திருந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்