மதுரை காமராஜர் பல்கலைக்கழக சான்றிதழ் பிரிவு ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி, பல்கலை கழக சான்றிதழ் பிரிவு அலுவலம் 3 நாட்கள் மூட பதிவாளர் உத்தரவு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியருடன் பணிபுரிந்த சான்றிதழ் பிரிவைச் சேர்ந்த இதர ஊழியர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மேலும் சான்றிதழ் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவு அலுவலகங்களையும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து மூட காமராஜர் பல்கலை பதிவாளர் வசந்தா உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்